Chennai HPO நமது ஊரில் இருக்கும் தபால் நிலையங்களை பார்த்து ஆச்சரியபடாமல் இருக்க முடியாது. சிறிய பகுதிகளை உள்ளடக்கிய தபால் நிலையங்கள் நமக்கு பக்கத்து வீடு மாதிரி. அவ்வளவாக கூட்டம் இருக்காது. உள்ளே போய் நம்ம பகுதியின் தபால்காரரை பார்த்து இப்போ லெட்டர் பாக்ஸ் வைத்துவிட்டோம், இனிமேல் அதிலேயே போட்டுவிடுங்கள் என்று சொல்லி விட்டு வரலாம். இந்தியா டுடே இல் இருந்து VPP பார்சல் வந்தால் வீடு வரைக்கும் தூக்கிட்டு வரவேண்டாம், இங்கிருந்தே திருப்பி அனுப்பி விடுங்கள் என்று தபால் பிரிப்பவரிடம் சொல்லலாம். போன் பில் கட்ட போனால், அங்கேயே புதிதாக கிடைக்கும் ஒரு தோழியிடம் ஊர் கதை உலக கதை எல்லாம் பேசி நீண்ட வரிசையில் காத்திருக்கும் நேரத்தை வீணாக்காமல் கழித்துவிட்டு அவர்கள் பையனை நம்மிடம் டியுஷனுக்கும் சேர்க்க வைத்துவிடலாம். ...