Vela...Vela...Velayutham.... Diwali Cracker தீபாவளி வெடியான விஜய் யின் வேலாயுதம் பார்க்கலாம்...பார்க்கலாம்...பார்த்து பார்த்து ரசிக்கலாம்.... இந்த படத்தில் hero introduction scenes எல்லாம் நல்லாத்தான் இருந்தது. அந்த flow -லே படத்தை கொண்டுபோகாம வேட்டைக்காரன், சுறா படங்களை மாதிரி சம்பந்தமே இல்லாம ஒரு வில்லன் கதையை விஜய்க்காக வேண்டி எங்கிருந்துதான் உருவாக்கிறான்களோ தெரியவில்லை. முதல் சில காட்சிகளிலே இருக்கிற இயல்பான சந்தோஷங்களையும் சிரிப்பையும் hero வும் தொலைத்து நம்மளையும் தொலைக்க வைக்கிறார். ஏன் அந்நியன் மாதிரி ஒரு கொலை வெறி... கிராமத்து சேலை ஹன்சிகாவுக்கு நல்லாயிருக்கு. சரண்யா மோகனுடைய சிரிப்பும் விஜயின் சிரிப்பும் அழகாக match ஆகிறது. படத்தோட ஒட்டாத கதாபத்திரம் ஜெனிலியாதான். ஊர் உலகத்தில இருக்கிற தத்துவத்தை எல்லாம் சினிமா பாட்டிலே கேட்டாதான் நமக்கு அறிவு வரும்னு அந்த காலத்திலேயே பட்டுக்கோட்டையார் பாடிவச்சிருப்பார் போல. அதை விஜய் படத்தில மட்டும் தவறாம follow பண்றாங்க. ஆமா...ஆமா...நமக்கும் பழகிருச்சி.....