லஞ்சம் சில மாதங்களாகவே லஞ்சம் ( corruption ) என்னும் பூதத்தை எதிர்த்து நம் நாட்டில் அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றோர் உண்ணாவிரதம் இருப்பதும், போலீஸ் அவர்களை கைது செய்வதும், மீண்டும் உண்ணாவிரதத்தை தொடர்வதும், அரசியல்வாதிகள் lokpal bill யை (அதன் முழு சாராம்சமும் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை; உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கே புரியுமா என்பது கேள்விக்குறி) நிறைவேற்ற போவதாக கூறிக்கொண்டே அதில் சுகமாக குளிர் காய்வதும் நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். இந்த லஞ்சம் என்பது கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் மட்டும் tension யை கொடுப்பதில்லை. கொடுக்க தெரியாதவர்களுக்கும் வாங்க தெரியாதவர்களுக்கும் கூட பிரச்னைதான். லஞ்சத்தால் நம் வரிப்பணம் கொள்ளை போகிறது. நம் நாட்டு பொருளாதாரம் சீர்குலைகிறது. Living Gandhi என்ற புதியதொரு பட்டத்தை பெற்றிருக்கும் அன்னா ஹசாரே சொல்வதும் சரிதான். இதற்கென்று பல சமூக ...