என் கணவரின் வேலை நிமித்தமாக சில மாதங்கள் திருநெல்வேலியில் இருந்த போது, induction stove -ல் சமையல் செய்தேன். கோயம்புத்தூர் வந்த பிறகு பழையபடி gas stove -ல் சமையல். ஒரு பத்து நாட்களுக்கு குழம்பி போய் நிறைய காமெடி எல்லாம் செய்தேன். Induction stove -ல் பாத்திரத்தை வைப்பதற்கு முன்னால் பாத்திரத்தின் அடியில் தண்ணீர் ஏதாவது இருந்தால் napkin வைத்து துடைப்பது வழக்கம். அதே மாதிரி gas stove க்கும் செய்து கொண்டிருந்தேன். இதாவது பரவாயில்லை. induction stove -ல் வைத்த பாத்திரம் சுடுவதில்லை. சும்மா கையாலேயே இறக்கிக் கொண்டிருந்தேன். இங்கே வந்தும் அதே மாதிரி gas stove -ல் இருந்து சூடான பாத்திரத்தை கையால் தொட்டு நாலைந்து தடவை கையை சுட்டுக் கொண்டேன். மின்சாரம் போய்விட்டால் ரொம்ப tension ஆகி ...