ஆண்களில் பல வகையானவர்கள் உண்டு. பல ஆண்கள் தன் இனத்திற்கே உரியதான ஆண் என்கிற கர்வத்தோடும் பெருமிதத்தோடும் நடந்து கொள்வார்கள். இவர்களால் பெண்களுக்கு என்றுமே தீராத துன்பம்தான். சிலர் பல சமயங்களில் தான் ஆண் என்கிற மிதப்போடும் சில சமயங்களில் மிதமாகவும் நடந்துக்கொள்வார்கள். இந்த மாதிரியான ஆண்களால் சில நேரங்களில் பெண்கள் சிரமப்பட்டாலும் பல நேரங்களில் தன் சுய புத்தியோடு நடந்து குடும்பத்தினருக்கு நிம்மதியை தருவார்கள். வெகு சில ஆண்கள் மட்டுமே மிகுந்த சிரத்தையோடு வாழ்க்கையை அணுகுவார்கள். பெண்களுக்கு வீட்டில் மரியாதையை கொடுப்பார்கள். அவர்களிடமும் யோசனை கேட்டு நடப்பார்கள். பெண்களையும் தன்னை மாதிரி ஒரு உயிருள்ள அறிவான ஜீவனாக நினைப்பார்கள். இவர்களால் தான் அவ்வப்போது சாவின் விளிம்பிற்கு தள்ளப்படும் பெண் சமுதாயம் உயிர்ப்பிக்கிறது. நம் இந்திய சமுதாயம் ஆண்களை சார்ந்தே இயங்குகிறது. இன்னும் பல தலைமுறைகள் கடந்தால்தான் நம் சமுதாயம் இருபாலரையும் சார்ந்து இயங்கும். அது வரையிலும் பெண்கள் அடங்கித்தான் போக வேண்டும் என்பது கட்டாயமல்ல. ஆனால் அனுசரித்து போக வேண்டியது கட்டாயம். நகரத்தில் வாழும் பெண்கள்