மயக்கம் என்ன....
டைரக்டர் செல்வராகவன்
இந்த திரைப்படம் டைரக்டர் செல்வராகவனுடைய அழகான படைப்பு. படத்தை பார்த்து முடிக்கும் போது படத்தில் இருந்த அமைதி ஒரு நாள் பொழுதாவது நம்மை கலைத்தது நிஜம். இந்த பாதிப்பை ஏற்படுத்திய தனுஷுக்கு பாராட்டு. தனுஷின் நடிப்பு திறன் படத்துக்கு படம் மெருகேறுகிறது என்பதும் உண்மை.
First half of the film is commercial about Love and second half is like an art film about Career.
இந்த படத்தை வெறும் திரைப்படமாக மட்டும் பார்த்தால் அருமை. அப்படி எத்தனை பேரால் பிரித்து பார்க்க முடியும்? பாடல்கள் படத்தின் கதையோடு ஒன்றி போயிருப்பது சமீபத்தில் வெளி வந்த படங்களில் இதில் மட்டும்தான் என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
படம் முழுவதும் தண்ணியிலேதான் (சத்தியமா தண்ணீரோ , கண்ணீரோ இல்லை ) மிதக்கிறது....கலாச்சார சீரழிவு (Dating , Drinking , Flirting ) படத்தின் முதல் பாதியில் தலைவிரித்து ஆடுகிறது. டைரக்டர் ஒரு பேட்டியில் dating க்கும் loving க்கும் என்ன வித்தியாசம் என்பதை நமக்கு ஒரு class வேறு எடுத்தார்.
உழைப்பவனுக்கு உடல் வலி அது தீரத்தான் குடிக்கிறான் என்று சொல்லி சொல்லி அந்த வர்க்கத்தையே நம் சமுதாயம் நாசமாக்கிவிட்டது. youth ன்னா இப்படிதான் dating போவது, தண்ணி அடிப்பது என்று formulate பண்ணி இந்த தலைமுறையையும் கெடுத்து அடுத்த தலைமுறையையும் கெடுக்கிறார்கள்...ஆமாம் அடுத்து இவர்களின் குழந்தைகளின் DNA யை டெஸ்ட் பண்ணி பார்த்தால், nucleic acid இருக்காது, ethanol தான் இருக்கும்.
நிஜத்தை எடுக்கிறேன் பேர்வழி என்று சின்ன சின்னதாக அங்கங்கே நடக்கும் விஷயங்களை பொதுவாகவே நடப்பதாக காண்பித்து சமுதாயத்தை சீரழிப்பதே திரைபடத்துறையின் பொழுது போக்காகிவிட்டது.
தலைப்புக்கும் கதைக்கும் இருக்கும் சம்பந்தம் என்ன என்றெல்லாம் நீங்கள் கேள்வி கேட்கக்கூடாது. அவங்க மயக்கத்தில் இருந்தாங்கன்னா மயக்கம் என்ன என்று பெயர் வைப்பார்கள்.... இல்லை, குழப்பத்தில் இருந்தாங்கன்னா குழப்பம் என்ன என்று பெயர் வைப்பார்கள்.....அது அவர்களின் இஷ்டம்.....
திருவாளர் செல்வராகவன்
"அடிடா அவள...உதடா அவள...வெட்றா அவள...."
இந்த பாட்டை அண்ணனும் தம்பியும் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள்.
திருவாளர் செல்வராகவன், உங்களுக்கு சோனியா அகர்வால் மேல கோபம் இருந்தால் அதை நீங்க பாட்டில சொன்ன மாதிரி தனிப்பட்ட முறையில் தைரியம் இருந்தா போய் செய்யுங்க ... அதை விட்டுட்டு திரைப்படம் மூலமா தீத்துகிறது அவ்வளவா நல்லா இல்லை. திரைப்படம் என்பது அதை பார்க்கும் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு சிறு பாதிப்பையாவது ஏற்படுத்தக்கூடியது.
ஆண்கள் எல்லோருமே காதல் தோல்வியால் பாதிக்கபடுவதாக நீங்கள் நினைப்பதை திரைக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். அப்படி பார்த்தால் திருமணம் என்ற பெயரில் ஆண்கள் பெண்களுக்கு செய்யும் துரோகங்களுக்கு (பத்து keeps வைத்துகொள்வது, ஒருத்தி இருக்கும் போதே இன்னொருத்தியை திருமணம் செய்வது, தான் பெற்ற பிள்ளைகுட்டிகளை நடுத்தெருவில் நிற்க வைப்பது, வரதட்சணை என்ற பெயரில் பெண்களை கொடுமைபடுத்துவது...) பெண்கள் எல்லாம் சேர்ந்து ஆண்களை
"அடிடா அவன...உதடா அவன...வெட்றா அவன..."
என்று கிளம்பட்டுமா...
சுருக்கமாக சொல்ல போனால், இந்த படம் செல்வராகவனின் இன்றைய தேதிவரை உள்ள வாழ்க்கை வரலாறு. முதல் பாதி சோனியா அகர்வால் செல்வராகவனிடம் ஏற்படுத்திய பாதிப்புகள் ....மீதி பாதி கீதாஞ்சலி கொடுத்த, கொடுத்து கொண்டிருக்கிற ஆறுதல்கள்....போதுமா மக்களே....இதுதான் செல்வராகவனுடைய மயக்கமும் குழப்பமும்....
முதல் பாதி சோனியா அகர்வால் செல்வராகவனிடம் ஏற்படுத்திய பாதிப்புகள் ....மீதி பாதி கீதாஞ்சலி கொடுத்த, கொடுத்து கொண்டிருக்கிற ஆறுதல்கள்...///
ReplyDeleteஅருமையாக சொல்லி இருக்கிறிர்கள்.
நன்றி நண்பரே....
ReplyDeleteசூப்பர் விமர்சனம்..."அடிடா அவன...உதடா அவன...வெட்றா அவன..."- தயவு செய்து இப்படியெல்லாம் கிளம்பிடாதீங்க.
ReplyDeleteபயப்படாதீங்க...அவ்வளவு சீக்கிரமா எங்க வர்க்கத்துக்கு தைரியம் வராது....
ReplyDelete