Skip to main content

Diwali Diyas and Crackers


Vela...Vela...Velayutham....Diwali Cracker




தீபாவளி வெடியான விஜய் யின் வேலாயுதம் பார்க்கலாம்...பார்க்கலாம்...பார்த்து பார்த்து ரசிக்கலாம்....

இந்த படத்தில் hero  introduction  scenes எல்லாம் நல்லாத்தான் இருந்தது. அந்த flow -லே படத்தை கொண்டுபோகாம வேட்டைக்காரன், சுறா படங்களை மாதிரி சம்பந்தமே இல்லாம ஒரு வில்லன் கதையை விஜய்க்காக வேண்டி எங்கிருந்துதான் உருவாக்கிறான்களோ தெரியவில்லை. முதல் சில காட்சிகளிலே  இருக்கிற இயல்பான சந்தோஷங்களையும் சிரிப்பையும் hero வும் தொலைத்து நம்மளையும் தொலைக்க வைக்கிறார். ஏன் அந்நியன் மாதிரி ஒரு கொலை வெறி...





கிராமத்து சேலை ஹன்சிகாவுக்கு நல்லாயிருக்கு. சரண்யா மோகனுடைய சிரிப்பும் விஜயின் சிரிப்பும் அழகாக match ஆகிறது. படத்தோட ஒட்டாத கதாபத்திரம் ஜெனிலியாதான். 


ஊர் உலகத்தில இருக்கிற தத்துவத்தை எல்லாம் சினிமா பாட்டிலே கேட்டாதான் நமக்கு அறிவு வரும்னு அந்த காலத்திலேயே பட்டுக்கோட்டையார் பாடிவச்சிருப்பார் போல. அதை விஜய் படத்தில மட்டும் தவறாம follow பண்றாங்க. ஆமா...ஆமா...நமக்கும் பழகிருச்சி...விட முடியவில்லை...  





               As  usual  music  and  dance  count...Kids craze for his movements and action in this film also.In this matter Vijay wont cheat. He fills out the needs of the producer, director and the audience. 
            Vijay ன்னா ஓடணும், சண்டை போடணும், டான்ஸ் ஆடணும், சட்டைக்கு மேல சட்டையா இரண்டு சட்டை போடணும் - இதெல்லாம் rules and regulations.

We like Vijay in Tata Docomo Ad than Jos Allukas. 

             
 Really a mass entertainer...





7am arivu......Diwali Diya



            Film with a different genre. Big hands to A R Murugadass for taking such an effort. The docu about Bodhidharma is etched out very well and Suriya suits very well.  The articles we read in net gives more info about this man.

             He could have include some more scenes of Bodhidharma. Because after seeing the legend on screen, the present generation hero is shown as a worthless one working in a circus company..hard to digest...We can be very well satisfied with Bodhidharma documentary instead of seeing a dummy replacement of the great man. 



                Sruthi Hassan replica of her father, Kamal Hassan in his youth - expressions, lively eyes, diction....Lots to improve...



                   Suriya looks good as the saint and martial arts expert. His postures, body language and his sedative and expressive eyes talks a lot as Bodhidharma. He again proves himself as a good actor.



               The Great Villain Johnny Tri Nguyen came all the way from Vietnam is good. He who gives the story a speedy move. Whatever effort the villain puts, the hero and heroine struggle to make an impact. The story fails to capture the audience in the second half. So many loop holes,  lacking focus on the plot, too much hype, borrowed Hollywood items like DNA, mind control, martial arts.... 

Not much impressive....           

Comments

  1. Velayudam is a crap movie. I have seen the complete movie in less than 1 hour. Not worth comparing with ‘7am Arivu’. Despite all the drawbacks (docu-drama effect), '7am Arivu' is worth watching for Surya’s dedication.

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த...