Skip to main content

கூடங்குளமும் கோயம்புத்தூரும்

            கோயம்பத்தூரில் மின்வெட்டு காரணமாக எல்லோரும் எவ்வளவு கஷ்டப்படறோம்ன்னு  சொல்லத்தான் இதை எழுதுறேன். அது என்ன கோயம்பத்தூர் மட்டும்....சென்னை தவிர மற்ற எல்லா இடங்களிலும் தான் கஷ்டப்படறோம் என்கிறீர்களா...சரி விடுங்க....தலைப்பு catchy யா இருக்குல்ல...

          நமது அருமை தமிழ்நாட்டில் மின்சாரத்துக்கு பஞ்சம். மின்வெட்டு இல்லாத நாட்களே...மன்னிக்கவும்....நிமிடங்களே இல்லை எனலாம்.

            நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.....என்று மைக் போட்டு முழங்கிய கட்சிகள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்றே தெரியவில்லை...முதலில் நமது மின்சார மந்திரியை தேடுவோம், ஏனென்றால், அம்மா ஆட்சியில் மந்திரிகளின் லிஸ்டை அப்பப்போ update பண்ணணும். 

          கண்டுபிடித்துவிட்டேன்....விஸ்வநாதன்....இவருக்கு பெரும்பாலும் இது விஷயம் தெரிந்திருக்க நியாயம் இல்லைதான். ஏன்னா, அவர் சென்னையில் குடியிருக்கிறார்.

           சென்னையில் ஒரு மணி நேரம் மட்டும் தான் மின்வெட்டு. அதற்கு போய் கருணாநிதி generator வாங்கிவைச்சிட்டார் என்று build up. ஒரு நாளின்  இடையில் மின்சாரம் போகவே போகாது. சென்னை EB யில் இருந்து இதற்கான பதில் என்ன தெரியுமா? மின்சாரத்தை கட் பண்ணினா அந்த areaவிலே   இருக்கிற IAS அதிகாரியோ, மந்திரியோ அல்லது அவரது மாமாவோ மேலிடத்திலே சொல்லிருவாங்கலாம். அதுக்காக நாம எல்லாம் சென்னையிலா போய் இருக்க முடியும்.....

            நம்ம ஊரில் மாதம் மாதம் முதல் தேதியானா எந்த ஏரியாவிலே எப்போ powercut ன்னு அழகா ஒரு லிஸ்ட் எல்லா நியூஸ் பேப்பர்லயும்   போட்டுறாங்க. ஆனால் முழுநாளும் நாங்க மின்சாரம் இல்லாமல் தான் இருக்கிறோம்.

மின்சார வாரியத்திற்கு ஒரு விண்ணப்பம் :       
வருகிற டிசம்பர் மாதத்திற்கான அட்டவணை போடும்போது, எப்போது மட்டும் மின்சாரம் இருக்கும் என்பதை வெளியிடுமாறு தயவு கூர்ந்து கேட்டு கொள்கிறேன்.  

           இங்கு எங்கள் ஏரியாவில் மாலை வழக்கமான மின்வெட்டு (4 மணி முதல் 6 மணி வரை)  போக ஏழரை மணி, எட்டரை மணி, பத்து மணி என்றல்லாம் விதவிதமாக மின்சாரத்தை பிடுங்குவார்கள். பிள்ளைகள் படிக்க முடியாது, பெண்மணிகள் TV serial பார்க்க முடியாது. கற்காலத்தில் வாழ்ந்தது போல் மாலையிலேயே இரவு சாப்பாட்டுக்கு  உள்ள வேலைகளை எல்லாம் முடிக்க வேண்டியுள்ளது.

            இப்போதெல்லாம் மின் வாரியத்திற்கு போன் பண்ணினால் முன்பு மாதிரி போன் receiver யை எடுத்து கீழே வைப்பதில்லை. ரொம்ப பொறுப்பாக பதில் சொல்லுகிறார்கள்.    " அப்படியா....current இல்லையா?....இப்போதான் ஆள் அனுப்பி இருக்கோம்......பக்கத்து state ல போய் கடன் வாங்கிட்டு நாளைக்கு காலைல வந்திருவாரு...."  என்று ரொம்ப தெளிவா உண்மையை சொல்றாங்கப்பா.....

            இந்த அழகில் கூடங்குளத்தில் இத்தனை பிரச்னை....வேலையை ஒழுங்கா பாக்கவிட்டாலே நம்ம ஆளுங்க அஞ்சு வருஷத்தில செய்யிற வேலையை பத்து வருஷமா செய்வாங்க.






            ரஷ்ய கூட்டு முயற்சியில் கூடங்குளம் அனல் மின் நிலையத்தில் வேலை ஆரம்பிக்க பட்டபோதே (1988) அது ரஷ்யாவின் உள்நாட்டு அமளிகளால் 10 வருடம் கிடப்பில் போடப்பட்டது. மறுபடியும் தூசி தட்டி 2001 இல் ஒரு சிறு துறைமுகம் போக்குவரத்துக்காக ஆரம்பிக்க பட்டு 2004 இல் செயல்படத்தொடங்கியது. 2008 இல் நான்கு மிண்ணுலைகள் வைப்பதற்கு பேச்சு வார்த்தைகள் முடிந்து வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு மின் உலையே 1000 MW மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் உடையது. நான்கு உலைகளும் சேர்ந்து 9200 MW மின்சாரம் உற்பத்தி செய்யும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.




       People's Movement against Nuclear Energy (PMANE) என்ற மக்கள் இயக்கம் முதலில் இருந்தே எதிர்த்து வருகிறது. இப்போது நம் தமிழ்நாட்டு அரசியலும் சேர்ந்து அழகாக விளையாடுகிறது. எதிர்ப்பாளர்களின் சந்தேகங்களையும் பயத்தையும் போக்குவோம் என்று Kudankulam Nuclear  Power Project (KKNPP) team சொல்லி  இருக்கிறது. 






            ஆனால் PMANE டீமில் உள்ளவர்கள் அவர்கள் என்னதான் சொன்னாலும் நாங்கள் மின் உற்பத்தி நிலையத்தை மூடியே தீருவோம் என்று கூறியிருக்கிறார்கள். நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூட அனைத்தையும் பார்த்து விட்டு எல்லா விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரிவர இருப்பதாக கூறியிருக்கிறார். ஒரு தரப்பினர் கூறுவது (eye wash ... )சரியாக கூட இருக்கலாம்.




            கண்மூடித்தனமாக எதிர்ப்பதை விட்டுவிட்டு நம்முடைய சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் விடை கிடைக்கிறதா என்று கேட்டு ஆராய்ந்து முடிவு பண்ண வேண்டும். அணு உலைக் கழிவுகளை என்ன செய்வார்கள் என்ற பயம் உங்களுக்கு இருந்தால் அதை அவர்களிடம் கேட்டு தெளிவு பெறுங்கள். அவர்களின் பதிலில் உங்களுக்கு திருப்தி வரவில்லை என்றால் வேறு வழிமுறைகளை பின்பற்ற சொல்லுங்கள். அதை விட்டு ஒரேஅடியாக அணுஉலைகளை மூடச் சொல்வது சரியல்ல.   . 

             இன்றைய சூழலில் மின்சாரம் என்பது மிக அவசியமானது. அதை நாமே உற்பத்தி செய்யும் ஒரு சந்தர்ப்பத்தை தட்டி கழிப்பது நியாயமாக தெரியவில்லை. மின்சாரம் இல்லாமல் சதா சர்வ நேரமும் இருளில் முழ்கி கிடக்கும் தமிழ்நாட்டுக்கு வெளிச்சத்தை கொண்டு வாருங்கள். 

பின் குறிப்பு :
இந்த வலை பதிவை எழுதி முடிப்பதற்குள் இரண்டு முறை கரண்ட் கட் ஆகி விட்டது.  

Comments

  1. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல ஒரே பதிவில் இரண்டு விஷயங்களையும் அழகாகவும் நகைச்சுவையோடும் அதே நேர்த்தில் சிந்திக்கவும் வைத்து இருக்கிறிர்கள். வாழ்த்துக்கள்( கரெண்ட் கட் இருந்தகாரணத்தினால்தான் இந்த மாதிரி நன்றாக உங்களால் சிந்தித்து பதிவு போட முடிந்தது இல்லையென்றால் டிவியில் சிரியல் பார்த்து கொண்டிருந்திருப்பிர்கள், அதனால் வாழ்க தமிழக அரசு என்று வாழ்த்துகிறேன்
    http://avargal-unmaigal.blogspot.com/

    Madurai Tamil Guy

    ReplyDelete
  2. I am trying to put comments using my google id but keep on getting error msg. that why i used anonymous.

    ReplyDelete
  3. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி...
    ஒரு சிறு திருத்தம்....டிவி சீரியல் பார்க்கிற பழக்கம் எனக்கு கிடையாது. சீரியல் பார்க்கிறவர்களால் நீங்கள் சொல்கிற தெளிவோடு எழுத முடியாது.எப்போவோ மூளை காணாம போயிருக்கும்...
    உங்களின் பதிவை பார்த்தேன். அருமை நண்பரே...

    ReplyDelete
  4. இன்றைய பொது சன மன நிலையை நன்றாக பிரதிபலித்துள்ளீர்கள். கூடங்குளத்தில் போராடும் மக்கள் எல்லாம் பொழுது போகாமல் போராடுபவர்கள் அல்ல. அரசின் பொய் பிரச்சாரங்களுக்கு செவி சாய்க்கும் நாம். நமது மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் கொஞ்சம் கவனிக்கலாமே. மேலும் தொடர http://www.valasaii.blogspot.in/2012/01/blog-post.html

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

பெண்ணுடலின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்முறை?

  பாலியல் வன்முறை ஐந்தாறு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, பெண்ணுடல் குறித்த சமூக தகவமைப்பு. கல்கத்தா மருத்துவர் மௌமிதா மீது நடத்தப்பட்ட மிக கொடுரமான பாலியல் வல்லுறவு வன்முறை அது. பெங்கால் ஆளும் கட்சியும், மத்தியில் இருக்கும் கட்சியும், பெங்கால் காவல்துறையும் இந்த வன்முறை குறித்து, மாறிமாறி ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவக் கல்லூரியின் பிரின்சிபால் சந்தீப் கோஷ் விசாரணையில் இருக்கிறார். பெண் பித்து பிடித்த சஞ்சய் ராயை கைது செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி வளாகம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சமூகமே இன்று கொதித்து நிற்கிறது. உயிர் காக்கும் தொழில் என்பதால் இந்த போராட்டம் கவனப்படுத்தப்படுகிறது. காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் மாநில அரசின் முதலமைச்சர், களத்தில் கொடி பிடிக்கும் பெண்களோடு கை கோர்த்து நின்று காமெடி செய்து, நடந்த கொடுரூரத்தைத் திசை மாற்ற முயற்சிப்பதை எல்லோரும் வேடிக்கை கூத்தாக பார்க்கிறோம். பெண்ணுக்கு எதிரான, பெண்ணுடலுக்கு எதிரான, பெண் சமூகத்துக்கு எதிரான கேலிக்கூ...