Skip to main content

அதிமுக மந்திரி மகளின் திருமண புறக்கணிப்பு

           தமிழகத்தின் புதிய மந்திரிகளில் ஒருவர் - Labour Minister திரு. செல்லபாண்டியன் செய்த காரியம் மிக விசித்திரமானது. தன் ஒரே மகளின் திருமணத்தை முன்னின்று நடத்தாமல் முதலமைச்சர்  அம்மா ஜெயலலிதா நடத்திய கட்சி கூட்டத்தில் பங்கேற்க சென்னை சென்று விட்டார். அவருக்கு இதுதான் முதல் M L A  மற்றும்  மந்திரி பதவி. அவர் இன்னும் எத்தனை தடவை வேண்டுமானாலும் இந்த பதவிக்கு வரலாம். அதுவும் இந்த பதவி ஐந்து வருடம்தான். ஆனால் அவரின் மகளின் மனதில் பட்ட காயம், தன திருமணத்தின் போது அப்பா இல்லை என்ற குறை அவள் உயிரோடு இருக்கும் வரை, ஏன் அடுத்த வம்சம் வரை பேசப்படுமே. இது ஏன் அவருக்கு புரியவில்லை. 

          அவர் சொல்லிய சமாதானம் வேடிக்கையாக உள்ளது. 'என் மகளும் அதிமுகவில்தான் இருக்கிறாள். அதனால் புரிந்து கொள்வாள்' என்று. கட்சி என்பது வேறு. குடும்பம் என்பது வேறு. அம்மாவின் விசுவாசியாக இருக்கலாம். ஆனால் அதற்காக சொந்த மகளை தண்டிக்க கூடாது. 

தகப்பன் இங்கேயே இருந்தும் திருமணத்திற்கு  வரவில்லை என்றால் என்ன அர்த்தம்...
  • பெற்ற மகளை விட அம்மா ஜெயலலிதாதான் முக்கியம்,
  • பதவிதான் முக்கியம்.


          இதெல்லாம் ஜெயலலிதா அவர்கள் கவனிக்க வேண்டும். நாங்கள் ஒட்டு போட்டது அடிமைகளை உருவாக்க அல்ல. மக்களுக்கு பணியாற்ற  நல்ல சமுக தொண்டர்களை உருவாக்கத்தான். இந்த தடவைதான் காலில் விழும் கலாச்சாரம் ஒழிந்ததே என்று நாங்கள் சந்தோஷபட்டு கொண்டிருக்கும் பொழுது இப்படி ஒரு கேவலமான விசுவாசம் தேவையா? தயவு  செய்து இது மாதிரி பட்ட விஷயங்களில் கவனம் வையுங்கள்.  

Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

பெண்ணுடலின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்முறை?

  பாலியல் வன்முறை ஐந்தாறு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, பெண்ணுடல் குறித்த சமூக தகவமைப்பு. கல்கத்தா மருத்துவர் மௌமிதா மீது நடத்தப்பட்ட மிக கொடுரமான பாலியல் வல்லுறவு வன்முறை அது. பெங்கால் ஆளும் கட்சியும், மத்தியில் இருக்கும் கட்சியும், பெங்கால் காவல்துறையும் இந்த வன்முறை குறித்து, மாறிமாறி ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவக் கல்லூரியின் பிரின்சிபால் சந்தீப் கோஷ் விசாரணையில் இருக்கிறார். பெண் பித்து பிடித்த சஞ்சய் ராயை கைது செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி வளாகம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சமூகமே இன்று கொதித்து நிற்கிறது. உயிர் காக்கும் தொழில் என்பதால் இந்த போராட்டம் கவனப்படுத்தப்படுகிறது. காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் மாநில அரசின் முதலமைச்சர், களத்தில் கொடி பிடிக்கும் பெண்களோடு கை கோர்த்து நின்று காமெடி செய்து, நடந்த கொடுரூரத்தைத் திசை மாற்ற முயற்சிப்பதை எல்லோரும் வேடிக்கை கூத்தாக பார்க்கிறோம். பெண்ணுக்கு எதிரான, பெண்ணுடலுக்கு எதிரான, பெண் சமூகத்துக்கு எதிரான கேலிக்கூ...