ஆண்களில் பல வகையானவர்கள் உண்டு. பல ஆண்கள் தன் இனத்திற்கே உரியதான ஆண் என்கிற கர்வத்தோடும் பெருமிதத்தோடும் நடந்து கொள்வார்கள். இவர்களால் பெண்களுக்கு என்றுமே தீராத துன்பம்தான்.
சிலர் பல சமயங்களில் தான் ஆண் என்கிற மிதப்போடும் சில சமயங்களில் மிதமாகவும் நடந்துக்கொள்வார்கள். இந்த மாதிரியான ஆண்களால் சில நேரங்களில் பெண்கள் சிரமப்பட்டாலும் பல நேரங்களில் தன் சுய புத்தியோடு நடந்து குடும்பத்தினருக்கு நிம்மதியை தருவார்கள்.
வெகு சில ஆண்கள் மட்டுமே மிகுந்த சிரத்தையோடு வாழ்க்கையை அணுகுவார்கள். பெண்களுக்கு வீட்டில் மரியாதையை கொடுப்பார்கள். அவர்களிடமும் யோசனை கேட்டு நடப்பார்கள். பெண்களையும் தன்னை மாதிரி ஒரு உயிருள்ள அறிவான ஜீவனாக நினைப்பார்கள். இவர்களால் தான் அவ்வப்போது சாவின் விளிம்பிற்கு தள்ளப்படும் பெண் சமுதாயம் உயிர்ப்பிக்கிறது.
நம் இந்திய சமுதாயம் ஆண்களை சார்ந்தே இயங்குகிறது. இன்னும் பல தலைமுறைகள் கடந்தால்தான் நம் சமுதாயம் இருபாலரையும் சார்ந்து இயங்கும். அது வரையிலும் பெண்கள் அடங்கித்தான் போக வேண்டும் என்பது கட்டாயமல்ல. ஆனால் அனுசரித்து போக வேண்டியது கட்டாயம்.

நகரத்தில் வாழும் பெண்கள் எல்லா உரிமைகளும் தங்களுக்கு கிடைத்துவிட்டதாக தம்பட்டம் அடித்து கொள்கிறார்கள். அதை பார்த்து கிராமத்தில் இருக்கும் பெண்கள் தத்தம் குடும்பங்களில் அதிகாரம் பண்ண நினைக்கிறார்கள். அவர்கள் வாழும் சூழல் வேறு, நாம் வாழும் சூழல் வேறு என்பதை புரிய தவறிவிடுகிறார்கள்.
தன் வீட்டு ஆண்களை அதிகமாக தலையில் தூக்கி வைத்து ஆடாமல் அவர்களையும் வீட்டில் உள்ள சிறு சிறு வேலைகளை பார்க்கும்படி பழக்கபடுத்த வேண்டும். 'என் பையன் எனக்கு மட்டும் தான் வேலை செய்வான். அவனுக்கு வரும் மனைவிக்கு எல்லாம் செய்யமாட்டான்' என்று பேசும் தாய்மார்கள் கவனிக்கவும். வேலை செய்து பழகியவன் யாராய் இருந்தாலும் உதவி செய்வான். பெண்கள்தான் பெண்களுக்கு பெரும் எதிரி. இதை ஆண்கள் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.
Comments
Post a Comment
உங்க கருத்தை சொல்லலாம்.....