ஜீன்ஸ் போட்ட அம்மா
ஒரு சமயம் என்னுடன் பயணித்த தம்பதிகளின் ஏழு மாத குழந்தை அழுதுக் கொண்டேயிருந்தது. அந்த பெண்ணுக்கு குழந்தையை தூக்கவும் தெரியவில்லை; அதை அணைத்து சமாதானப்படுத்தவும் தெரியவில்லை. அவள் கணவன்தான் வைத்திருந்தான். கேட்டால், 'அய்யய்யோ, எனக்கு குழந்தை எல்லாம் பார்த்துக்க தெரியாது.' என்று ஒரு படம் ஒட்டிக்கொண்டிருந்தாள். அவன் மட்டும் என்ன ஏற்கனவே பத்து பிள்ளைகளை வளர்த்தவனா என்ன...
ஒரு முறை விமானத்தில் ஒரு பெண் விமானம் take off ஆகும்போது குழந்தை அழுதுகொண்டே இருந்ததால், பணிப்பெண் குழந்தைக்கு பால் புகட்ட கூறிவிட்டு சென்றாள். உடனே அந்த பெண் தான் போட்டிருந்த டி- சர்ட்டை சட்டேன்று தூக்கியபோது ஒரு நிமிடம் பதறி விட்டேன். கழுத்தை சுற்றி போட்டிருக்கும் shawl வைத்து மூட வேண்டும் என்பது கூட தெரியாமலா இருக்கிறார்கள் இப்போதைய பெண்கள்?
இப்படிப்பட்ட பெண்களையே பயணங்களில் பார்த்து பார்த்து அலுத்து போயிருந்த எனக்கு அன்றைய ரயில் பயணம் ஒரு அதிசயத்தை காட்டியது. கோயம்பத்தூரில் இருந்து சென்னை செல்லும் கோவை எக்ஸ்பிரசில் ஜீன்சும் குர்தாவும் அணிந்த அந்த பெண்ணை குழந்தையுடன் அவள் கணவன் ரயிலில் ஏற்றிவிட்டு சென்றான்.
இன்றைக்கு நம் பயணம் அவ்வளவுதான் என்று நினைத்தேன். நேர் எதிர்மறையாக, அந்த பெண் தன் குழந்தையை தன்னிடமே வைத்துகொண்டு அதற்கென்று சாப்பாடு, தண்ணீர், டவல், உடை எல்லாமே தானே கொடுத்து அழகாக குழந்தையை சமாளித்து....அதிசயித்து போனேன் நான்....இவளை பெற்றவளும் திருமணம் செய்தவனும் கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்தேன். பயணம் முடிந்து சென்னை வந்து இறங்கும் போது அவளுடைய பெற்றவர்கள் அழைத்து செல்ல வந்திருந்தார்கள். என்னால் அவர்களை பார்த்துவிட்டு சும்மா போக முடியவில்லை. அவர்களிடம் அந்த பெண்ணை புகழ்ந்து நாலு வார்த்தை சொல்லிவிட்டுத்தான் கிளம்பினேன். Hats off to that girl....
பெண்களே, உங்களின் வெளி அலங்காரங்கள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம், மனதின் உள்ளே நீங்கள் ஒரு குழந்தையின் தாய் என்பதை மட்டும் மறக்காதீர்கள்.
niraya pengal thai agave virumbuvathillai enbathai ariveergala?
ReplyDeletei know that....
Deleteஇப்படி நல்ல பெண்களை பார்க்கும் போது மனதுக்கு இதமாக இருக்கிறது ....
தாய்மை சாகவில்லை என்ற நம்பிக்கை உண்டாகிறது ...
உங்களின் பார்வை மிக பாராட்டதக்கது.
ReplyDeleteஎன் குழ்ந்தையை என்மனைவி பார்த்து கொள்வதைவிட நீங்கள் சொன்னபடி நான் அதிகம் பார்த்து கொண்டேன் அதனால் என் மனைவிக்கு பார்க்க தெரியவில்லை என்று அர்த்தம் எடுத்துக்க கூடாது. காரணம் மனைவியின் மேல் உள்ள அக்கறையால் அவளுக்கு அதிகம் கஷ்டம் கொடுக்க கூடாது என்பதனால் என்ன்னை போல உள்ளவர்கள் உதவி செய்கின்றோம்.
ஆனால் நீங்கள் சொன்னபடி நிறைய சீன் காண்பிக்கும் பெண்கள் இப்போது அதிகம் என்பதை ஒத்து கொள்ள வேண்டும்
எங்கள் வீட்டிலும் இதே நிலைமைதான்....தன் குழந்தையை சிரத்தையுடன் பார்த்துக்கொள்ளும் பெண்கள் குறைவுதான்.....
Deleteஉங்களின் இந்த பசுமையை நோக்கிய பயணத்தை வரவேற்கிறேன், அருள்....
ReplyDeleteஉங்கள் வ்லைப்பூ அழகா இருக்குங்க்கா! என்னோட வலைப்பூ www.padithurai.blogspot.com படிச்சிட்டு உங்க கமெண்ட்டைப் போட்டீங்கன்னா கோயமுத்தூர் கோணியம்மனுக்கு உங்க பேர்ல அர்ச்சனை பண்ணுவேன்! ;-) தவிர, நான் இன்னிலேர்ந்து ஃபேஸ்புக்லயும் இருக்கேன்.
ReplyDeleteகிருபா...அழகா தைரியமா எழுதி இருக்கீங்க....நிறைய எழுதுங்க.....கமெண்ட் போட்டிருக்கேன், அதுக்காக எல்லாம் நம்ம கோணியம்மனை தொந்தரவு பண்ணிக்கிட்டு......
ReplyDeletenice review. women should have to think
ReplyDeleteya....thanks...
Deleteஅவர்கள் குழந்தையை பிரசவித்தவர்களாக இருக்கலாம்
ReplyDeleteதாயாக பிறக்காதவர்களாக இருக்கலாம்
தலைப்பு அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி அவர்களே....
Deleteஉங்களின் அழகா பார்வையும் நோக்கமும் சிந்தனயும் அருமை மேலும் எழுதுங்க அக்கா
ReplyDeleteநன்றி.....
DeleteExcellent...
ReplyDeletethanx guru...
Deleteசில நேரங்களில் நீங்கள் எழுதுவதை போல் நாங்கள் எழுத முடியாது .அப்படியே மீறி எழுதினால் எங்கள் பார்வையில் தான் கோளாறு என்பார்கள் .
ReplyDeleteஉண்மைதான் ...அதனால் தான் நாங்க எழுதுறோம்...நன்றி பிரசன்னா...
Delete